பக்கம்:துளசி மாடம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 85


குடுக்கச் சொல்லேன்"-என்றார். சிறிது நேரம் ஊர் விவகாரங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சர்மா மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே போனார்.

அவர்படியிறங்கும்போது ஒரு சிறிய பிரம்புக் கூடை நிறையக் குடைம்ல்லிகைப் பூவுட்ன் வசந்தி பின் தொடர எதிரே வந்து கொண்டிருந்தாள் கமலி, ஒரு சிறு குழந் தையின் உற்சாகத்தோடு அவள் அந்தப் பூக்களைக் கொய்து நிர்ப்பிக் கொண்டு வருவது தெரிந்தது. சர்மா சிரித்தபடி அவர்களைக் கடந்து மேலே நடந்து சென்றார் .

கமலியை மாடியில் கொண்டு போய் விட்டுவிட்டுத் தான் வீட்டிற்குப் போய்விட்டு அரை மணி நேரத்தில் மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றஈள் வசந்தி. வீட்டுக்குப் புறப்படு முன் ஞாபகமாகச் சமையலறை வாசலில் நின்று காமாட்சி மாமியைக் கூப்பிட்டுச் சிரித்துக்கொண்டே. "மாமி! பாயாசம் வையுங்கோபிள்ளை ரொம்ப நாளைக்கப்புறம் ஊர் வந்திருக் கிறதைக் கொண்டாட வேண்டாமோ?" என்று சொல்லி விட்டு வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிய கொண் டாட்டக் காரணத்தை மனத்தின் உள்ளே நினைத்த வளாகச் சென்றாள் வசந்தி. திரும்பி வந்து மல்லிகைப் பூவைத் தொடுப்பது எப்படி என்று கமலிக்குக் கற்றுக் கொடுப்பதாக ஒபபுக் கொண்டிருந்தாள் அவள்.

တိံ တိို ထိို

விடிந்ததிலிருந்து வெய்யிலே தெரியாமல் சாரல் துாறிக் கொண்டிருந்ததால் அன்று சங்கரமங்கலம் மிக மிக அழகாக இருந்தது. மேற்குப் பக்கம் மலைத் தொடர்கள் மயில் கழுத்து நிற நிலத்தில் பளபளத்தன. மழைக் காலத்தில் மணப்பெண்ணுக்கு வருகிற அழகு போல் மலைகளுக்கு எல்லாம் வரும் பருவ அழகு ஒன்று உண்டு. அப்படி அழகு அந்த மலைகளில் அன்று வந்து கவிந்திருந்தது. காலையில் இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து திரும்பியதற்காக மறுபடி ஒரு தடவை ஸ்நானம் செய்துவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தார் சர்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/87&oldid=579803" இலிருந்து மீள்விக்கப்பட்டது