பக்கம்:துளசி மாடம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 97


கவனிக்கிறார்கள் என்பதற்காகப் பாடியதுபோல் தெரியவில்லை. பித்தளைப் பந்துகளில் ஒன்றுகூடக் கீழே விழுந்து விடாமல் விரைந்து மாற்றி மாற்றிப் பிடிக்கும் சிரமமான செயலில் இருந்து வழுக்கி விடவோ தவறிவிடவோ செய்யாமல், தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்வதற்காகத் தன்னுள் இலயித்துப் பாடிய மாதிரியே இருந்தது. பாடலை ரெக்கார்டரிலும் பாடிய மாமியின் தோற்றத்தைக் காமிராவிலும் பிடித்துப் பதிவு செய்து கொண்டாள் கமலி. உள்ளே அதிக வெளிச்ச மில்லாத அந்தக் கர்நாடகமான பழைய கிராமாந்: தரத்து வீட்டின் சமையல் கட்டு முகப்பில் புகைப்படம் எடுக்க . .பிளாஷ் தேவைப்பட்டது. கழங்காடல், பல்லாங் குழி, சோழி விளையாட்டு எல்லாவற்றையும் ஒவ்வொன் றாக அவற்றுக்குரிய கிராமீயப் பாடல்களுடன் ஆடிக் காட்டினாள் காமாட்சியம்மாள். சில பாடல்களில் அந்தப் பிாதேசத்துக் கொச்சைமொழி நி ர ம் பி வழிந்தது.

'இந்த விளையாட்டுக்களோட சேர்த்துப் பாடறதுக் குன்ன்ே நிறையப் பாடல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கு. கமலி அம்மானை ஆடறப்போ மாமி பாடிய பாட்டு பக்கத்திலே இருக்கிற பிரம்மபுரம் சிவன் கோவில் அம்மன் பவளநாயகி மேலே யாரோ பாடினது. இந்த விளையாட்டோட இப்படிப் பாட்டெல்லாம் சேர்ந்த காரணம்தான் எனக்குப் புரியலே ! சில பாட்டு கொச்சை யாகவும், தப்பாகவும் கூட இருக்கு !'

'அசாதாரணமான திறமையைக் காட்டி முழு கான் ளெபண்ட்ரேஷனோட .ெ ச ய் யற விளையாட்டுக்கு 'ஸெல்ஃப் சப்போர்ட்டிங் ஆகவும் உற்சாகமாகவும் சோர்வு தெரியாமல் இருக்கிறதற்காகவும் தான் இப்படிப் பட்ட பாடல்கள் எல்லாம் உண்டாகியிருக்கனும், காட்டு வழியிலே தனியா நடந்து போகிறவன் தனக்கு ஒரு துணையும் தைரியமும் உல்லாசமும் உண்டாக்கிக் கொள்ளத் தானே சீட்டியடித்துப் பாடி அ ந் த ப் பாட்டையே-தனக்கு வழித் துணையாக்கிக் கொள்கிற மாதிரிதான் இதுவும். ஃபோக்லோர்' ஆராய்ச்சியிலே இதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் வசந்தி நாட்டுப்

து-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/99&oldid=579815" இலிருந்து மீள்விக்கப்பட்டது