பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

9

துளு நாட்டு வரலாறு 1. துளு நாடு பழைய பெயரும் புதிய பெயரும் சங்க காலத்தில் துளுநாடு என்றும் கொங் கணநாடு என்றும் பெயர் பெற்றிருந்த நாடு இக் காலத்தில் தென் கன்னட மாவட்டம் என்று பெயர் பெற்றிருக்கிறது. வடகன்னடம், தென் கன்னடம் என்று பெயர்பெற்ற இரண்டு மாவட்டங்கள் பாரத நாட்டின் மேற்குக் கரையோரமாக இப் போது இருக்கின் றன. இவற்றில் வடகன்னட மாவட்டம், முன்பு பம்பாய் மாகாணம் என்று பெயர் பெற்றிருந்து இப்போது மகாராட்டிர தேசம் என்று பெயர் வழங்குகிற இராச்சியத்தில் இருக்கிறது. தென்கன்னட மாவட்டமானது பழைய சென்னை மாகாணத்தோடு இணைந்திருந்து, பாரத நாடு சுதந்தரம் பெற்ற பிறகு மைசூர் இராச்சியத்தோடு இணைக்கப்பட் டிருக்கிறது. இந் தத் தென் கன்னட மாவட்டந்தான் பழைய துளு நாடு. துளுநாட்டுக்குக் கொங்கணநாடு என்றும் கொண்கான நாடு என்றும் கொண்பெருங்கானம் என்றும் சங்க காலத்தில் பெயர் இருந்தது. துளுநாடாகிய கொங்கணநாடு தென் கன்னட மாவட்டம் என்று பெயர்பெற்றது மிகச் சமீப காலத்தில்தான். ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம் பெனியார் தென் இந்தியாவில் வந்து வாணிகஞ் 1062-1