பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

துளு நாட்டு வரலாறு

14 'அறுவைத் துளு நாட்டு வரலாறு தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண்பல இழிதரும் அருவிநின் கொண்பெருங் கானம் பாடல் எனக்கு எளிதே'* என்று அவர் பாடுகிறார். கொண்கானத்து (துளு நாட்டு)க்குக் கிழக்கேயுள்ள உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இன்றும் பல அருவிகள் தோன்றிப் பாய்வதைக் காண்கிறோம். இப்புலவரே 'கொண்பெருங் கானத்துக்'கிழானைப் புறம் 155 ஆம் பாட்டில் பாடியுள்ளார். கொண்கானங் கிழான் தன்னை நாடி வரும் இரவலருக்குப் பொருள் கொடுத்தான் என்றும் அவன் பிற வேந்தரை வென்று அவர்களிடம் திறை வாங்கினான் என்றும் புறம் 156ஆம் செய்யுளில் இப் புலவர்கூறுகிறார். இச்செய்யுள்களில் இவர் கொங்கணநாட்டைக் கொண்பெருங்கானம் என்று கூறுவது காண்க. கொங்கணம், கொண்கானம், கொண்பெருங்கானம் என்பன எல்லாம் ஒன்றே. நன்னனுடைய கொங்கணக் காட்டில் (கழை ) மூங்கில் அதிகமாக விளைந்தன என்று கூறுகிறார். கொங்கணத்தைக் 'கானம்' என்று சுருக்கமாகக் கூறுகிறார். 'விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கில் கானமர் நன்னன்•'** என்று அவர் கூறுவது காண்க. (கான்-கானம், கொங்காணம்)

புறம். 154:10-13 அகம். 392 : 26-27