பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

17

துளு நாட்டு வரலாறு 17 ருக்கும் பெயராயிற்று. பாழிமலை, ஏழில்மலையின் ஒரு பகுதி. 'பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச்சிலம்பு" இவ்வூரைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது என்பது, 'செம்பு உறழ் புரிசைப் பாழி" என்பதனால் தெரிகிறது. மேலும் இவ்வூர் கறையடி யானை நன்னன் பாழி, என்றும் 'சூழி யானை சுடர்ப்பூண் நன்னன் பாழி யாங்கண் கடியுடை வியன்நகர் என்றும் கூறப்படுகிறது. பாழி நகரைச் சூழ்ந்து இருந்த இடம் 'பாழிப் பறந்தலை, என்று பெயர் பெற்றிருந்தது. பாழிமலைமேலிருந்து பார்த்தால் அதனைச் சூழ்ந்திருந்த நாடுகள் தெரிந்தன. 'அருந்தெறல் மரபிற் கடவுள் காப்பப் பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை அணங்குடை வரைப்பிற் பாழி பாழி நகரக் கோட்டையில், நன்ன அரசர் பெருநிதியைச் சேர்த்து வைத்திருந்தனர். இதனை, 'அணங்குடை வரைப்பிற் பாழியாங்கண் என்றும், வேள் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த அருங்கல வெறுக்கை 7 'நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்.'8 1. அகம்.152: 12-13 2. அகம்.3751 13 3. அகம். 142: 9 4. அகம்.15: 10-11 5. அகம். 208: 6 6. அகம். 372: 1-3 7. அகம். 372:8-5. 8. அகம். 258: 1-3