பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

துளு நாட்டு வரலாறு

20 துளு நாட்டு வரலாறு 'பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம்* என்றும் 'நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றம்' என்றும் 'ஓங்கு புகழ்க் கானமர் செல்வி அருளலின் வெண்கால் பல்படைப் புரவி எய்திய தொல்லிசை நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய இனமழை தவழும் ஏழிற் குன்றத்து'+ என்றும் இது கூறப்படுகிறது. செல்வி இதனால் ஏழில் மலையில் கானமர் யாகிய கொற்றவைக்குக் கோவில் இருந்தது என் றும், ஏழில் மலையை 'நுணங்கு நுண்பனுவல் புல வன்' ஒருவன் பாடினான் என்றும் தெரிகின்றன. ஏழில்மலையைப் பாடிய புலவன் பரணராகவோ அல்லது மோசிகீரனாராகவோ இருத்தல் வேண்டும். ஏழில்மலை, மேற்குக் கடற்கரையோரமாகக் கண்ணனூருக்கு வடமேற்கே 16 மைல் தூரத்தில் இருக்கிறது. ஏழில் மலை என்னும் இரயில் நிலைய மும் உண்டு. சங்க காலத்தில் துளுநாட்டைச் சேர்ந்திருந்த இந்த எழில்மலை இப்போது மலையாள நாட்டில், மலபார் மாவட்டத்துச் சிறைக்கல் தாலுக்காவில் சேர்ந்திருக்கிறது. ஆனால், இது முன்பு துளுநாட் டைச் சேர்ந்திருந்தது. பிற்காலத்தில், மலையாளி நற்.391:6-7 அகம்.349:8-9 அகம் 345:3-7