பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

துளு நாட்டு வரலாறு

32 துளு நாட்டு வரலாறு இவன் போரில் சிறந்த வீரனாக இருந்தான். பிண்டன் என்னும் வலிமிக்க சிற்றரசனுடன்போர் செய்து அவனை வென்றான். அந்தப் போர் எங்கு கடந்தது, அந்தப் பிண்டன் என்பவன் யார் என்பன தெரியவில்லை. பரணர் என்னும் புலவர் இச்செய் தியைக் கூறுகிறார். 'உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன் முனைமுரண் உடையக் கடந்த வென்வேல் பாரத்துத் தலைவன் ஆர நன்னன்.' * இந்த நன்னன் வேறு அரசர்களுடனும் போர் செய்து அவர்களை வென்றான் என்று கூறப்படுகி றான். இவன் வென்ற வேறு அரசர் பெயர் கூறப் படவில்லை. தான் போரில் வென்ற அரசருடைய மனைவியரின் கூந்தலை மழித்து அக் கூந்தலினால் கயிறு [முரற்சி] திரித்தான் என்று கூறப்படுகி றான். இச்செய்தியையும் பரணர் என்னும் புலவரே கூறுகிறார். 'விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தல் முரற்சியிற் கொடிதே' இவன் இரவலருக்கு வழங்கினான். யானைகளைப் பரிசு 'இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவன் ஆர நன்னன்.' + இவன் பெண்கொலை புரிந்த நன்னன் என்றுங் கூறப்படுகிறான். அச்செய்தி இது:

  • அகம். 152: 9-12

+ அகம். 152:11-12 நற்.270:8-10