பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

33

துளு நாட்டு வரலாறு 33 இவனுக்குரிய தோப்பு ஒன்றில் மாமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் ஓரமாகச் சிற்றாறு ஒன்று பாய்ந்து கொண்டிருந்தது. அந்த மரத்தி லிருந்த மாங்கனியொன்று சிற்றாற்றில் விழுந்து நீரில் மிதந்து கொண்டு போனதைச் சிறிது தூரத் ஒரு பெண்மகள் தில் நீராடிக் கொண்டிருந்த எடுத்துத் தின்றாள். அப்பெண் அக்கனியைத் தின்ற செய்தியை நன்னன் அறிந்தான். சினங் கொண்டு அவளுக்குக் கொலைத் தண்டனை விதித் தான். அரசருக்குரிய பொருள்களைக் களவு செய்தவ ருக்கு அக்காலத்தில் கொலைத் தண்டனை விதிப்பது வழக்கம். பாண்டியனுடைய பொற்சிலம்பைக் களவு செய்தான் என்று [பொய்யாகக்] குற்றஞ் சாட்டப்பட்ட கோவலனுக்குக் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டது. அக் காலத்தில் வழக்கத்தில் இருந்த இந்தச் சட்டங் காரணமாகத்தான். அரசனாகிய நன்ன னுடைய மாங்கனி என்பதை யறியாமல், நீரில் மிதந்து வந்த மாங்கனியை எடுத்துத் தின்ற குற்றத்துக்காக அப்பெண்ணுக் அப் குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்ணின் தந்தை நன்னனை வேண்டிக் கொண் டான். அப்பெண் அறியாமல் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டுமென்றும், அந்தக் குற்றத் துக்குத் தண்டமாகத் தொண்ணூற்றொன்பது யானைகளையும் அப்பெண்ணின் எடையளவு பொன் னையுங் கொடுப்பதாகவும் அப்பெண்ணைக் கொல் லாமல் விட வேண்டும் என்றும் வேண்டிக் கொண் டான். நன்ன்ன் அவ்வேண்டுகோளுக்கு உடன்