பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

35

துளு நாட்டு வரலாறு 35 கொண்டார் சரித்திரப் பேராசிரியர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள். கோசர், நன்ன னுடைய பட்டத்து யானையைக் கொன்று விட்ட னர் என் று அவர் எழுதியுள்ளார்.* மா என்பதற்கு விலங்கு [யானை] என்றும் பொருள் உண்டாகை யால் அவ்வாறு அவர் எழுதி விட்டார். அது தவறு. மா என்பது இங்கு மாமரத்தையே குறிக்கும்.) கடல் துருத்திக் குறும்பர் நன்னனுடைய துளுநாட்டுக்கு அருகிலே கட லிலே ஒரு சிறு தீவு இருந்தது. (இத்தீவைப் பற்றி முன்னமே கூறியுள்ளோம்.) அத்தீவில் குறும் பனாகிய ஒரு வீரன் இருந்தான். அவன் அந்தத் தீவில் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வைத்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைச் சார்ந்த வீரர் களுடன் சேர்ந்து, அக்காலத்தில் ரோமாபுரியிலி ருந்து வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுக்கு வந்து கொண்டிருந்த யவனக் கப்பல்களைக் கொள் ளையடித்து அக்கப்பல்கள் சேர நாட்டுக்கு வருவ தைத் தடுத்துக் கொண்டிருந்தான். இவ்வாறு பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. இந்தத் தீவிலிருந்த குறும்பச் சிற்றரசன் நன்னனுக்குக் கீழடங்கியவன். நன்னனுடைய தூண்டுதலி னாலே அக் குறும்பன் யவனக் கப்பல்களைச் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வராதபடி கொள்ளை யடித்துக் கொண்டிருந்தான். கி. பி. முதல் நூற் றாண்டின் இறுதியில் இருந்த பிளைனி என்னும்

Pp. 84, 85, Beginnings of South Indian History. S. Krishnaswamy Ayyangar.