பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

39

துளு நாட்டு வரலாறு 39 செங்குட்டுவன் கடற்போரைச் செய்ததைக் கூறு கிற செய்யுட்கள் வேறு சில உள்ளன. அவற்றை யெல்லாம் இங்குக் காட்ட வேண்டியதில்லை என்று கருதுகிறோம். சேர அரசர் கடல் தீவிலிருந்த குறும்பரை வென்றதற்கும் துளுநாட்டு நன்னருக்கும் என்ன பொருத்தம், என்ன தொடர்பு என்று வாசகர்கள் கருதக்கூடும். கடல் தீவில் இருந்த குறும்பருக்கும் துளு நாட்டு நன்னனுக்கும் நெருங்கியதொடர்பு உண்டு.* இரண்டு காரணங்களைக் கொண்டு இருவருக்கும் தொடர்புண்டென்பதை யூகிக்கலாம். கடல்தீவு மிகச் சிறியது. அத்தீவிலிருந்தவர் தங்கள் தீவுக்கு அடுத்திருந்த நாட்டினரின் உதவி இல்லாமல் தனி த்து இயங்கும் வாய்ப்பு உடையவர் அல்லர் என் பது முதல் காரணம். அந்தக் கடல்தீவு துளுநாட்

நன்னனுடைய ஏழில்மலை கடற்கரைக்கு அருகிலே ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த மலை, கடலில் 27 மைல் தூரம் தெரிகிறது. இம் மலைமேலிருந்து பார்த்தால் கடலில் தூரத்தில் வருகிற கப்பல்களைக் காணலாம். சங்ககாலத்துக்கு மிகப் பிற்காலத்திலே, இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னே போர்ச்சுகல் தேசத்திலிருந்து இந்தியாவுக்கு முதல் முதல் வந்த வாஸ்கோ-ட-காமா என்பவன், இந்தத் துளு நாட்டு ஏழில் மலையைக் கடலில் தூரத்தில் வரும் போதே கண்டு இதன் அடையாளத்தைக் கொண்டு இதன் அருகில் கண்ணனூரில் வந்து தங்கினான். ஏழில் மலைக் கருகில் கடல் கொள்ளைக்காரர்கள் இருந்தார்கள் என்று பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த மேல்நாட்டு யாத்திரிகர்கள் எழுதியிருக்கி றார்கள். எனவே, கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து (கடைச் சங்க காலத்திலிருந்து) துளு நாட்டில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்று கருதலாம்.)