42
துளு நாட்டு வரலாறு
42 துளு நாட்டு வரலாறு பல்யானைச் செல்கெழு குட்டுவன்* கொங்குநாட்டின் ஒரு பகுதியான கொல்லிக் கூற்றத்தைக் அக்காலத் தில் ஓரி என்னும் சிற்றரசன் யரசாண்டான். அப் போ து, சேர அரசன், மலையமான் திருமுடிக்காரி என்பவனைத் தன் சேனைத் தலைவனாகக் கொண்டு அவன் மூலமாக ஓரியைக் கொன்று ஓரியின் கொல் லிக் கூற்றத்தைக் கைப்பற்றினான். இவ்வாறு சேரர் கொங்குநாட்டில் ஆதிக்கம் பெறுவது சோழ பாண்டியருக்கு விருப்பமில்லை. மேலும், கொல்லிக் கூறத்துக்கு அருகில் இருந்த கொங்கு நாட்டின் மற்றொரு சிற்றரசனாகிய தகடூர் அதிக மான், சேரரும் துளுநாட்டு நன்னரும் கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கடைசியில் தன்னையும் வென்று விடுவார்கள் என்று அஞ்சினான். இவ்வா றிருந்த போது பசும்பூண் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன், தென்கொங்கு நாட்டில் சேர அரசர் முன்னமே கைப்பற்றியிருந்த ஊர்களைத் தவிர ஏனைய ஊர்களைக் கைப்பற்றிக்கொண்டான். பசும்பூண் பாண்டியன் பசும்பூண் பாண்டியனைத் தலையாலங்கானத் துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்று சிலர் தவறாகக் கருதுகிறார்கள். பசும்பூண் பாண்டியன் வேறு, நெடுஞ்செழியன் வேறு. தலையாலங்கானத் துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்குப் பசும் பூண் செழியன் என்னும் பெயரும் உண்டு பசும்பூண் செழியன் வேறு, பசும்பூண் பாண் டியன் வேறு. நெடுஞ்செழியனுக்கு மூன்று தலை 3-ஆம் பத்து. பதிகம். புறம். 76:9