பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

துளு நாட்டு வரலாறு

44 துளு நாட்டு வரலாறு அக்காலத்தில் சேரநாட்டு மன்னர் கொங்கு நாட்டில் சில இடங்களைக் கைப்பற்றியிருந்ததோடு அமையாமல் மேலும் ஊர்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்துகொண் டிருந்தார்கள். சங்க காலத்திலே கொங்குநாட்டைச் சிற்றரசர் பலர் ஆட்சி செய்திருந்தார்களே தவிர முடியுடைய பேரரசர் ஒருவரும் ஆட்சி செய்யவில்லை. ஆகவே சேர சோழ பாண்டியஅரசர் அச்சிற்றரசர்களை எளி தில் வென்று கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள். கொங்கு நாட்டைக் கொஞ்சங் கொஞ்ச மாகச் சேர அரசர் கைப்பற்றிக் கொண்டிருக்கும் போது, பசும்பூண் பாண்டியன் கொங்குநாட்டில் புகுந்து அந்நாட்டு ஊர்கள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டது காரணமாகச் சேரர், பாண்டியன் மேல் பகை கொண்டனர். ஆகவே அது காரணமாகச் சேர அரசர் பசும்பூண் பாண்டியனோடு போர் செய்ய நேரிட்டது. பாண்டியன் சேனையை அவன் சேனைத் தலைவனான நெடுமிடல் அஞ்சி தலைமை தாங்கி நடத்தினான். அவ்வாறு நடந்த சில போர் களில் நெடுமிடல் அஞ்சி தோல்வியும் அடைந்தான். இச்செய்தியைச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். சங்கச் 'நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் பொருமலை யானையொடு புலங்கடை இறுத்து'* என்றும், 'நெடுமிடல் சாய்த்த பசும் பூண்பொருந்தலர்' என்றும் கூறுவது காண்க.

பதிற்றுப்பத்து. நாலாம் பத்து. 2 : 10-11. அகம். 266 : 12,