46
துளு நாட்டு வரலாறு
46 துளு நாட்டு வரலாறு 'கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை ஒளிறுவான் கொங்கர் ஆர்ப்பு* என்று அச்செய்யுள் கூறுவது காண்க. பசும்பூண் பாண்டியனுடைய துளுநாட்டுப் போர் தோல்வியாக முடிந்தது. துளுநாட்டரசன் நன்னன் இரண்டாவன் வெற்றி பெற்றான். அதன் பிறகு பசும்பூண் பாண்டியனுடைய செய்தி ஒன் றுந் தெரியவில்லை. பாண்டியன் போர் முடிந்த பிறகு துளு நாட் டின் மேல் சேரன் போர் தொடுத்தான். சேரன் செங்குட்டுவனுடைய தமயனான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், தனக்கு அடங்காமலும் தனக்கு எதிராகப் போர் செய்து கொண்டுமிருந்த நன்னனை அடக்குவதற்காகத் துளு நாட்டின் மேல் போர் தொடுத்தான். சேரன் போர் நன்னன் இரண்டாவன், தன்மேல் படை யெடுத்து வந்த சேரனுடன் போர் செய்ய வேண்டி யவனானான். இந்தப் போர் மிகக் கடுமையாக இருந்தது. சேரன், நன்னனை அடியோடு அழிக்க வேண்டும் என்னும் உறுதியுடன் படையெடுத்துப் போய்ப் போர் செய்தான். சேரன் நன்னனை அழிக்க வேண்டிய காரணங்கள் மூன்று இருந் தன. முதலாவது, நன்ன அரசர் சேரநாட்டுக்கு வரும் யவன வாணிகக் கப்பல்களைச் சேரநாட்டுக்கு
- குறுந் 393:3-6.