பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

துளு நாட்டு வரலாறு

48 துளு நாட்டு வரலாறு கடற்கொள்ளைக்காரர் அரசாண்டனர் என் று தாலமி கூறுவது, துளுநாட்டு நன்னர்களையாகும். நன்ன அரசர்கள் கடற்கொள்ளைக்காரரை ஆதரித் தவர்கள். யவனக் கப்பல்கள் சேரநாட்டுத் துறை முகப் பட்டினங்களுக்கு வராதபடி கடற்கொள் ளைக்காரர்களைக்கொண்டு அவர்கள் தடுத்து வந் தார்கள். கடற்கொள்ளைக்காரரை ஆதரித்த நன் னர் புன்னாட்டைக் கைப்பற்றி யிருந்தபடியால், புன்னாட்டைக் கடற்கொள்ளைக்காரர் அரசாண்ட னர் என்று தாலமி கூறினார் போலும். பெயர். புன்னாட்டின் தலை நகரம் கிட்டூர் என்பது. அதைச் சங்கச் செய்யுள் கட்டூர் என்று கூறு கிறது. பாசறைக்கும் கட்டூர் என்பது ஆனால் இந்தக் கட்டூர் பாசறை அன்று கட்டூராகிய கிட்டூர் பிற்காலத்தில் கிட்டிபுரம் என்று வழங்கப் பட்டது. அவ்வூர், காவிரி ஆற்றின் கிளை நதியா கிய கப்பணி ஆற்றின் கரைமேல் இருந்தது. புன்னாடு பிற்காலச் சரித்திரத்தில் 'புன்னாடு ஆறா யிரம்' என்று பெயர் பெற்றிருந்தது. (சங்க காலத் தில் வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த புன்னாடு இப்போது மைசூர் இராச்சியத்துடன் இணைந்தி ருக்கிறது.) நீலக்கல் சுரங்கத்துக்குப் பேர் போன புன்னாட் டைத் துளுநாட்டு நன்னன் கைப்பற்றிக்கொண்ட படியால், கொங்கு நாட்டில் அவனுடைய ஆதிக்கம் பெருகும் என்றும் அதனால் தன்னாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அறிந்தான் சேரமன்னன். ஆகவே, களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல்,

  • அகம். 44:10. 9-ம் பத்து. 2:2 10:30.