4
துளு நாட்டு வரலாறு
றாகக் குறிப்பிட்டிருப்பதோடு அக்காலத்தில் துளு நாட்டை யரசாண்டிருந்த தமிழ் மன்னர்களைப் பற்றி யும் இந்நூலில் விரித் துரைத்துள்ளார். அசோகர் சாசனங்களில் கூறப்படுகிற சத்திய புத்திர நாடு, துளு நாடுதான் என்று இந்நூலாசிரியர் முடிவு கட்டியுள்ளார். இதுபற்றிப் பலவேறுபட்ட கருத் துக்கள் தோன்றியுள்ளன வாயினும், 'வாய்மொழிக் கோசர்' இருந்த துளு நாடே சத்தியபுத்திர நாடு என்பதுதான் என்னுடைய கருத்துமாகும். தமிழ் மொழியில் உள்ள சில சொற்கள் துளு பாஷையில் இன்றும் காணப்படுவதையும் இந்நூலில் விளக்கியிருக் கிறார். பிக்க உயர்தரக் கல்வியையும் தாய் மொழியிலேயே கற் வேண்டுமென்று கருதுகிற இந்நாளில் இது போன்ற பல நூல்கள் தேவைப்படுகின்றன. இந்நூலாசிரியர், மேலும் இது போன்று பல ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவார் என்று நம்பு கிறேன். சென்னை 27-1-1966. } கே. கே. பிள்ளை.