பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

49

துளு நாட்டு வரலாறு 49 நன்னனை அடக்கத் துளுநாட்டின் மேல் படை யெடுத்தான். நன்னனுடைய பிடியிலிருந்து புன் னாட்டை விடுவிப்பதற்காகப் புன்னாட்டின் காப்பா நன்னன்மேல் படையெடுத்துச் கச் சேரன் சென்றான். முதற்போர் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், தன்னு டைய உறவினனும் சேனைத் தலைவனும் ஆகிய வெளியன் வேண்மான் ஆய்எயினன் என்பவன் தலைமையில் தன் சேனையைத் துளுநாட்டின் மேல் போர் செய்ய அனுப்பினான். வெளியன் வேண் மான் ஆய்எயினன், நன்னன்மேல் படையெடுத் துச் சென்றான். அவனை நன்னனுடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் இடத் தில் எதிர்த்தான். கடுமையாக நடந்த அந்தப் போரில் ஆய்எயினன் இறந்துபோனான். அதனால், சேரன் தொல்வியடைந்தான். இதனை, 'பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென யாழிசை மறுகிற் பாழி யாங்கண் அஞ்ச லென்ற ஆஅய் எயினன் இகலடு கற்பின் மிஞீலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது. என்பதனாலும், 'வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை இழையணி யானை இயல்தேர் மிஞீலியொடு நண்பகல் உற்ற செருவிற் புண்கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந் தென' என்பதனாலும்,

  • அகம். 396 : 2-6

அகம். 208:5-9