பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

துளு நாட்டு வரலாறு

32 துளு நாட்டு வரலாறு நார்முடிச்சேரலின் தம்பியாகிய சேரன் செங் குட்டுவன்,இப்போரில் துளுநாட்டின் கடற்கரைப் பகுதியில் இருந்த வியலூர், கொடுகூர் என்னும் ஊர்களைக் கைப்பற்றிய செய்தியைக் கீழ்க்கண்ட செய்யுள்களினால் அறிகிறோம். 'உறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து* 'கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் இப்போரின்போது செங்குட்டுவன், துளுநாட் டின் துறைமுகப்பட்டினமான நறவு என்னும் பட்டி னத்தையும் பிடித்தான். இவ்வாறு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் தன் தம்பியருடன் சேர்ந்து துளுநாட்டை வென்று அடக்கினான். இவ்வெற்றியைக் கல்லா டனார் மிகத்தெளிவாகக் கூறுகிறார். "குடா அது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடுதந் தன்ன வளம்' பிறகு துளுநாடு சேரரின் ஆட்சிக்குட்பட்டது. நன்னன் மூன்றாவன் (ஏறத்தாழ கி. பி. 150-180) இரண்டாம் நன்னனுடைய மகனான மூன்றாம் நன்னன் சேரருக்கு அடங்கித் துளுநாட்டை

  • 5 ஆம் பத்து: 10-12 + சிலம்பு. நடுகல். 114 - 115

அகம்.199:18-23.