பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

53

துளு நாட்டு வரலாறு 53 யரசாண்டான். அவன், தான் சேரனுக்கு அடங்கி யவன் என்பதற்கு அடையாளமாக நன்னன் உதியன் என்று பெயர் பெற்றிருந்தான். நன்னன் என்பது துளுநாட்டு அரசரின் குடிப்பெயர். உதி யன் என்பது சேரநாட்டு அரசரின் குடிப்பெயர். எனவே, நன்னன் உதியன் என்பதற்குச் சேரர் ஆட்சிக்கு உட்பட்ட நன்னன் என்பது பொருள். கன்னன் உதியன் அருங்கடிப்பாழி* சேரர் துளுநாட்டைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்த பிறகு புன்னாடும் அதன் தலை நக ரமான கட்டூரும் சேரர் ஆட்சிக்குட் பட்டன. நன்னன் மூன்றாவன் சேர அரசர்களுக்கு அடங்கித் துளுநாட்டை யரசாண்டான். பெரும் பூட்சென்னி என்னும் சோழன் வடகொங்கு நாட்டி லிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின் மேல் படையெடுத்துச் சென்றபோது, சேர அர சன் சார்பாக அக் கட்டூர்ப் போரில் சோழனை எதிர்த்த சிற்றரசர்களில் இந்த நன்னன் உதிய னும் ஒருவன் என்று தெரிகிறான். கட்டூரின்மேல் படை யெடுத்துவந்த பெரும்பூட்சென்னியின் சேனைத்தலைவனாகிய பழையன் என்பவனை எதிர்த் தவர்கள் இந்த நன்னனும் ஏற்றை, அத்தி, கங்கன் கட்டி, புன்றுறை என்பவர்களும் ஆவர். 'நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன், கட்டி, பொன்னணி வல்விற் புன்றுறை என்றாங்கு அன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென'**

அகம்: 258:1

அகம். 44 : 7-11.