பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளு நாட்டு வரலாறு

7

7 சான்று காட்டும் பொருட்டும் சில செய்திகள் மீண்டும் மீண்டும் கூற வேண்டுவது அவசியமாகவுள்ளன. இவற்றைக் கூறியது கூறல்' என்னும் குற்றமாகக் கருதக் கூடாது. தனி இலக்கிய நூல்களுக்கே 'கூறியது கூறல்' என்னுங் குற்றம் பொருந்துமே யல்லாமல், சரித்திர ஆராய்ச்சி நூலாகிய இது போன்ற நூல்களுக்கு அக் குற்றத்தைச் சாற்றுவது கூடாது. வேண்டிய இடங் களில், கூறியதையே மீண்டும் மீண்டும் கூறாமற் போனால் தெளிவும் விளக்கமும் பெற முடியாதாகை யால் அவ்வாறு கூறவேண்டுவது அவசியமாயிற்று. இந்நூலுக்கு ஓர் அணிந்துரை எழுதித் தரவேண்டு மென்று வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே.கே. பிள்ளையவர்களைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அவர்கள் அணிந்துரை எழுதியுதவினார்கள். அவர் களுக்கு என்னுடைய நன்றி. இந்நூலை அச்சிட்டு வெளியிட்ட சென்னை சாந்தி நூலகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு. அ. பழ. முத்துராமன் அவர்களுக்கும் எனது நன்றியுரிய தாகும். சென்னை 27-1-1966. } மயிலை.சீனி. வேங்கடசாமி.