பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

–27

அறனும் திேயும் ஆகும் என்று எனக்குத் தோன்று கிறது ' என்றனன்.

இவ்வாறு இராமன் கூறக்கேட்ட இராவணனது இளவலாம் விபீடணன்" இராமா. நீ கூறுவது முற்றி லும் அழகிய கருத்தேயாகும்' என்று தன் கருத்தினே யும் கூறினன். குரங்குகட்குத் தலைவனை சுக்ரீவன். "இரகு குலதிலக, தாது போக்குதல் மன்னர்க்குரிய நீதிமுறையாகும்." என்று மொழிந்தனன். ஆல்ை. இளவலாம் இலக்குவன்மட்டும். அண்ணு, பிறரிடம் சென்று ஒன்றை இரப்பது இழுக்காகும், ஆகவே, அம்பு தொடுத்து அரக்கனை அலக்கழித்துச் சீதையை விடுதலை செய்தலே உசிதம். இராவணனிடம் தாது விடுக்காது போரில் அவனைக்கொல்வதே முறை. அவன் தேவியைச் சிறையிட்டவன் தேவர்கட்குத் துன்பம் விளைவித்தவன்; அந்தணர்கட்கு அலக்கண் புரிக் தவன்; உயிர்களே வாட்டி வதைப்பவன்; ஆசையின் மிகுதியில்ை அகில மெல்லாம் தானே ஆள எண்ண முள்ளவன்:இந்திரன்துய்த்தபோகம் எல்லாவற்றையும் அவனே வென்று பெற்றவன்; வழியற்ற வழியில் செல் பவன்; நீ துன்புறும்படி உன் தேவியை உன்னை விட் டுப் பிரித்து வைத்தவன்; சீதைமீது இரக்கம்கொண்டு எதிர்த்த சடாயுவையும் கொன்ற மகாபாவி. மற்ருென் றையும் உனக்கு கினைவுபடுத்த விரும்புகிறேன். ே கூறியனுப்பும் முறைப்படி அவன் ஒருவேளை சீதை