பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

யும் அழித்து அதன்பின் சூரபதுமனது ககரத்தையும் அழிவு செய்தனர்.

வீரவாகு தேவர் தம் வன்மையினை வீரமகேந்திர புரியில் காட்டி மீண்டும் கடலைக் கடந்து செந்தில் மாநகர்ச் சேர்ந்து செவ்வேள் பரமன் சேவடி வணங் கினர். குமாரக் கடவுள் வீரவாகு தேவரைப் புன்னகை கொண்டு வரவேற்று, ' சென்ற காரியம் யாதா யிற்று' என்று வினவினர். வீரவாகுதேவர் தாம் சென்று குரனைக்கண்டு தேவர்களைச் சிறைவீடு செய்யு மாறு கூறியும் அவன் அது செய்ய ஒருப்படாது போருக்கே ஆயத்தமாய் இருப்பதைக் கூறினர். இவ் வாறு கூறக்கேட்ட ஏந்தலாம் முருகப்பெருமான் ககைத்து " நீ துரது சென்று மீண்டதை மட்டும் கூறிய்ை. ஆனால், நீ ஆண்டு புரிந்த ஆற்றலேமட்டும் அறைந்திலேயே. அதனையும் கூறுக ' என்று வற் புறுத்தவே, வீரவாகு தேவர்,

'தெர்டக்கம் உற்றுவாழ் சூரன் மாநகர்

அடுத்த காலையின் அகன்ற வேலையில் தடுத்து ளோரைதின் சரண வன்மையால் படுத்து வந்தனன் பான்மைஈது ' என்ஞன்.

அதாவது, ' யான் சூரன் வாழ் இடமான மகேந்திர புரியினே அடைந்தபோது என்னைச் சில அரக்கர் தடுத் தனர். அவர்களே யான் உன் திருவடி மீது வைத்துள்ள