பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 து சன் எழுதி த்தே விகங்கள் மருதாபி: (விசனத்தோடு) அதற்காக நீ இப்படி ஓடிப் போகலாமா? - • - சரோஜா: அக்கா, ஊரெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு அவருக்குத் தொந்தரவு கொடுத்தால் அதை எப்படி அவர் சமாளிக்க முடியும்? இதுவோ கிராமம். பட்டணமாக இருந்தால் கவலையில்லை. இங்கே பழைய சம்பிரதாயங்கள் ேவ ரூ ன் றி இருக்கின்றனவே!...அதோடு, சுற்றிலும் உள்ளவர் களுடைய உதவியில்லாமல் இங்கு வாழ முடியுமா? அவர் என்னை மறந்துவிட்டுச் சாதி வழக்கப்படி கல்யாணம் செய்துகொண்டு.நிம்மதியாகஇருக்கட்டும் என்று நினைத்துத்தான் போனேன். மருதாயி : என்னிடம் கூடச் சொல்லாமல் போய்விட் டாயே! - . . - சரோஜா : உங்களிடம் சொன்னுல் நான் போவதற்குச் சம்மதிப்பீர்களா? உடனே அவரிடம் விஷயத்தைச் சொல்வி.... . : ... மருகாயி . சரோஜா, என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா? - - சரோஜா : நம்பிக்கையா? எங்கிருந்தோ வந்த என்னை உடன் பிறந்த சகோதரியாக நினைத்து நீங்கள் நடத்தியதைநான் உயிருள்ள வரை மறக்க முடியுமா? மருதாயி ; நீ இங்கே இருந்தபோது என் இருண்ட வாழ்விலே கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. இப் போது பழையபடி எல்லாம் இருட்ட்ாய் விட்டது. நீங்கள் இரண்டு பேரும் குடும்பம் நடத்துவதைப் பார்த்துச் சந்தோடிப்பட நான் கனவு கண்டு கொண்டிருந்தேன். . சரோஜா : (ஏக்கத்தோ அக்கா, அதையெல்லாம் பேசி என்ன பலன்ட்விதிப்படித்தான் எல்லாம் நடக்கும்ட என்று நீங்களே அடிக்கடி சொல்லுவீர்கள். இல்லா