பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. - - 117 که به سه. பொன்று அம்மா, அப்ப வரவேண்டாம். எங்கேயோ போகட்டும். - தயம்மாள் ஏன் வரவேண்டாம்? х பொன்னு: தினமும் அப்பா உன்னிடம் சண்டை பிடிப் பார். அன்றைக்கு அடித்தாரோ இல்லையோ? தாயம்மாள். தம்பிக்கு மறுபடியும் மலேரியாக் காய்ச்சல் வந்திருக்கிறது. என்ன செய்கிறது? தலே வலித் திருக்கும். அதற்காகத்தான் அழுதிருப்பான். பொன்னு: அம்மா, இட்டிலி இல்லையா? (பாத்திரத்தில் இருந்த சோற்றைச் சாப்பிட ஆரம்பிக்கிருள்.) ... தாயம்மாள் இட்டிலிக்கு எங்கே போகிறது? பொன்னு: தேற்றுக் கொண்டுவந்தாயே? தாயம்மாள்: நேற்று மிச்சம் இருந்ததை அந்த மகராஜி கொடுத்தாள். தினமும் கிடைக்குமா? பொன்று அம்மா, நேற்று இங்கே அக்கா வந்திருந் தாள். எனக்கு மிட்டாய் கொடுத்தாள். தாயம்மாள். எந்த அக்கா? (ஆடுப்புப் பற்ற வைத்துக்கொண்டே பேசு கிருள். . பொன்னு: அதுதான் உனக்குத் தெரியாதா? நீ வேலை செய்யும் வீட்டு அக்கா விஜயாதான். தாயம்மாள். விஜயாவை அக்காவென்று சொல்லியா கூப்பிட்டாய்? யாராவது கேட்டால் சண்டைக்கு வருவார்கள். "பொன்னு: ஏம்மா, கூப்பிட்ட்ால் என்ன?