பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 துன்சன் எழுத்தே சவியங்கன் பெற்ற நான் என்னுடைய வாக்கைக் காப்பாற்றி னேன் என்று அவளுக்குக் காண்பிக்க முடிய வில்லையே என்றுதான் வருந்துகிறேன். சேஆதிபதி: ராணிபாய் முன்பே உங்களுக்குக் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். ஹசமாயூன்: (கடந்துகொண்டே) அதுதான் எனக்கு விளங்கவில்லை. ஏன் இவ்வளவு நெருக்கடி வரும் வரை என் உதவியை நாடவில்லை என்பது மர்மமாக இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை கடைசி வரையில் உண்டாகவில்லை போலிருக்கிறது. சேனுதிபதி : இதற்காகவா நீங்கள் ராஜ்யத்தை இழந் தீர்கள்? ஹவாயூன்: (உறுதியோடு அது போளுல் போகிறது. இந்த உடம்பிலே உயிரும், இந்தக் கையிலே வாளும் இருக்கிறவரையில் இந்த ராஜ்யம் நினைத்தால் வரும். ஆணுல் என் சகோதரி கருளுவதியின் உயிரை மீட்க முடியுமா? அவளுடைய ஆன்மா வாவது நான் கங்கணப் பரிசுக்குத் துரோகம் செய்ய வில்லையென்று அறிந்துகொண்டால் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகும். திரை.