பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதி பீன் பிழை 25 "அந்தக் குழந்தைக்கு என் சொத்தையெல்லாம் கொடுக்க வேண்டுமென்பது என் ஆசை. அதனுல் எழுதி வைத்தேன். பிறகு அதைக் கொல்லப் போன தெல்லாம் தண்டனை பெறுவதற்கு ஒரு வழியாகத் தான்." r "அப்போ, அந்தக் குழந்தைக்குச் சொத்தை எழுதி வைப்பானேன்?' என்று மாரியப்பன் விஷயம் புரியாமல் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். "அந்தக் குழந்தைக்குத் தீங்கு செய்ய எனக்கு உத்தேசமே கிடையாது. சும்மா அப்படி பாவனை பண்ணினேன். எனக்கு வேண்டியது சிறை தானே?” சிறையா?” முத்துசாமி விஷயம் மேலும் மர்மமாகிவிட்டது. “மாரியப்பா, அந்தக் காலத்திலே நான் என் அத்தை மகளைக் கலியானம் செய்துகொள்ள வேணு மென்று எத்தனையோ ஆசையாக இருந்தேன். ஆயுள் தண்டனை பெற்றுச் சிறைக்குள் நுழைந்ததும் அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டது. என் சிற்றப்பன் தன் மகன் ராமசாமிக்கே அந்தப் பெண்ணைக் கலி யாணம் செய்து வைத்துவிட்டார் என்பதை வெளியே போன பிறகுதான் தெரிந்து கொண்டேன். இதிலும் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.” "அந்தப் பெண்ணின் மகளு அந்தப் பையன்?" "ஆமாம், அவள் பெற்ற மகன்தான். என் சொந்த ஊரில் நானிருந்த சில நாட்களில் என் வீட் டுக்கு அவன் அடிக்கடி ஓடி வருவான். அவனைத் தவிர மற்றவர்களை நான் பார்க்கவில்லை. சிற்றப்ப துக்கும், ராமசாமிக்கும் என்னைப் பாச்க்கவே-அவமான