பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆ. சன் கழுத்தோவியங்கள் கட்டுண்டு கிடக்கும் அந்தப் பிராணியைப் புலி அடித்துத் தின்னத் தொடங்கும்போது மர உச்சியில் இருப்பவர்கள் அதன் முகத்திலே விழும்படி பிரகாசம் மிகுந்த மின்சார டார்ச்சு ஒளியைத் திடீரென்று போடு வார்கள். புலியின் கண்கள் இருட்டு நேரத்திலே பூனை யின் கண்கள்போல இன்னும் அகலமாக விரிந்திருக் கும். அதனுல் பிரகாசமான ஒளி பட்டவுடன் புலி திகைப்படைந்து பார்வை கலங்கி அசைவற்று நிற்கும். அத்தச் சமயம் பார்த்து ஆற அமர இருந்து துப்பாக்கி யிலே குறி வைத்துச் சுடுவார்கள். அதிலே அத்தனை ஆபத்துக் கிடையாது. ஷோக் மாள் வேட்டையைப் போல இதுவும் ஷோக் வேட்டைதான். சுந்தரத்திற்கு இது கொஞ்சங்கூடப் பிடிக்காது. காட்டு விலங்கு நடமாடுகிற இடத்திற்கு நேரே அவன் செல்லுவான். மான் முதலான தனக்கு விருப்பமான இரையைத் தேடிப் புலியும் அங்கு வந்து பதுங்கிக் கொண்டிருக்கும். அதைக் கண்டுபிடித்து நேருக்கு நேரே சுட வேண்டும். இதுதான் அவன் விரும்புவது. இதிலே ஆபத்துண்டு. சாமர்த்தியத்திற்கும் இடம் உண்டு. "ஷோக் வேட்டை என்ருல் அது கிழவிகள் செய்யவேண்டிய காரியம்" என்பான் சுந்தரம். அவனை நீலகிரி வட்டாரத்திலே விகாரி சுந்தரம் என்றுதான் அனைவரும் அழைப்பார்கள், காட்டு விலங்கு வேட்டையிலே விருப்பமுள்ள செல்வர்களில் அவன் உதவியை நாடாதவர்கள் இல்லை. அதனுல் சுந்தரத்திற்கு நல்ல வரும்படி. புலித்தோலும் போட் டோக்களும் செல்வர்களின் வீட்டை அலங்கரிக்கும்: சுந்தரத்திற்கு அவற்றைப் பற்றி லட்சியம் భ్రాముడి). செத்துப்போன புலி அவன் கவனத்தை இழுக்காது.