பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3శ ச சன் சமூத்தோனியங்கன் அடிச்சுவடுகளும் சுந்தரத்திற்கு தன்ருகத் தெரியும். இப்படி மனிதனும் விலங்கும் போட்டி போட்டுக் கொண்டு கண் வைத்திருத்தது மற்றவர்களுக்குத் தெரி யாது. ஆளுல் இந்தப் போட்டி மட்டும் வளர்ந்து கொண்டே யிருந்தது. சுந்தரம் அந்தத் தடாகத்துக்கு மேல்புறமாக மரக் கூட்டங்களிடையே மெதுவாக அமர்ந்தான். அங்கி ருந்து நாலு பக்கமும் தன்ருகப் பார்க்கலாம். அவன் அங்கே சேருவதற்கும் முன்நிலா மறைவதற்கும் சரி யாக இருந்தது. அவனுக்கு இருட்டிலே பார்த்து நல்ல பழக்கமுண்டு. கூர்ந்த பார்வையும், சிறிய அரவத்தையும் அறிந்துகொள்ளக்கூடிய செவி நுட்ப மும் காட்டு வேட்டையிலே பெரிதும் தேவை. பயிற்சி உடைந்த அவனுடைய புலன்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்கும். - அன்றைக்கு வெகு நேரம் வரையிலும் யாதொரு பிராணியும் நீரருந்த வாவில்லை. மனித வாடையைக் கண்டு கொண்டனவோ என்று சுந்தரத்திற்கு క్టిఓ முண்டாயிற்று, வேட்டை கிடைக்காவிட்டால் தீபாவளி இன்பமளிக்காதே என்று அவனுக்குக் கவலை. அதே சமயத்தில் அந்தப் பஞ்சுக் காலன் தன்னை நீண்ட நாளாக ஏமாற்றி வருவதை நினைத்து அதன்மேல் எரிச்சலும் உண்டாயிற்று. அவன் மனத்திலே பலவித மான நினைவுகள் ஓடின. சுந்தரம் மெதுவாக மல் லாந்து தரையில் சாய்ந்தான். சிந்தனையின் ஒட்டமும், சிறிதும் கலைவுருத ஆழ்ந்த நிசப்தமும் சேர்ந்து எப் படியோ அவனுக்குச் சிறிது நேரத்திலே உறக்கத்தை உண்டாக்கி விட்டன. கண்கள் அவனை அறியாமலே உறக்கத்தில் மூடின. வலது கையில் வைத்திருந்த