பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尊 துரன் எழுத்தேசண்டிங்கள் அதிசயமாக இருக்கிறது. எல்லாம் கனவுபோல நடக் கிறது' என்ருன் கண்ணப்பன். இதைக் கேட்டதும் தாத்தாவுக்கு ஒருவகையான ஆறுதல் பிறந்தது; அவர் கவலை மறையத் தொடங்கி யது. “அவன் இதை என்றுமே பார்க்க வேண்டாம்' என்று கூறிக்கொண்டே அவர் தமது இடுப்பில் சாவிக்கொத்தோடு சேர்ந்து தொங்கிய பேளுக்கத்தியை எடுத்து அந்த ஓவியத் திரையைச் சின்னபின்னமாகக் கிழித்து விட்டார். 或系 ! ஓர் அற்புதமான ஓவியம் போய்விட் உதே கோபாலனுக்கு இதல்ை அழியாத புகழ் வந் திருக்குமே, தாத்தா!" என்று கண்ணப்பன் படபடப் புடன் பேசினன். - "இதல்ை வருகின்ற புகழைக் காட்டிலும் துயரந் தான் பெரிதாக இருக்கும்' என்று ஏங்கினர் தாத்தா. - “எப்படி, தாத்தா?’ என்று ஆவலோடு கேட்டான் கண்ணப்பன். தாத்தா அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தார். விஷயத்தை அறிந்துகொள்ள அவனுக்கு இருந்த ஆவல் அதிலே தெளிவாக விளங்கியது. அவனிடம் சொன்னுல் தவறில்லை என்று தாத்தா தொடங்கினர். “அந்த ஓவியத்தைப் பார்த்தாயா? முக்காலியை ஓங்கிக்கொண்டு கொலை வெறியோடு நின்ருனே, அவன்தான் கோபாலனின் தந்தை-என் மகன்; குடிப் பழக்கத்திலே கெட்டுப் போனவன். ஒரு நாள் இரவு மிதமிஞ்சிய குடிவெறியிலே தன் மனைவியை முக்காலியாலே ஓங்கி மண்டையில் அடித்து விட்டான். அது காரணமாகவே அவள் இறந்துபோளுள். அந்தக் கொடுஞ்செயன்தடந்தபோது கோபாலனுக்கு இரண்டு