பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் ஏக்கம்

கண்ணின் மணியே, கனிரசமே, கற்கண்டே! பெண்ணரசே யுன்றன் பிரியமதை நானறிவேன்; உள்ளமதை நீயுரையாய், உன் தாயுங்கேட்டறியாள் தெள்ளு தமிழ் நாட்டில் தலைக்காதல் முன்னாளில்; கற்றறிந்தார் போற்றும் கலித்தொகையும் அகநூலும் கற்றுக் களித்திடலாம் கண்டதுண்டோ இந்நாளில் 1 "இங்கிலீஷ் படிக்கப் போய் இவனுமே கெட்டுவிட்டான் : எங்கும் இவனைப்போல் யாரையுமே கண்டதில்லை” என்றெந்தன் பந்துக்கள் ஏசி யிகழ்கின்றார். கன்றி மனம் வெந்து குலைகின்றேன் கண்மணியே. அரைக் காணி நிலமுண்டு அதையுழுவும் எண்ண மில்லை ; புரையுண்டபுண்போலப் பொங்குகின்ற தென்நெஞ்சம். காதல் தனியேரால் காமனதை புழுகின்ருன்: சாதல் எனக்குத்தான் தண்ணமுத மாகுமின்றே. என் நோய் பெரிதில்லை; எப்படியோ சாகின்றேன்; உன் நோய் தனைத்தீர்க்க ஒருவழியங் காணேனே ! வாழ்நாள் முழுவதுமே வருந்தி யுளத்த ழுந்தி ஊழ்வினையை நொந்து உயிர்த்திடுவாய் ஐயையோ! கண்ணீர் தனையுகுத்துக் கரந்திருந்து விம்மிடுவாய்; எண்ணாதன வெண்ணி ஏங்கிடுவாய் என் செய்கேன்? பண்டைத் தமிழ்நாடு பாரினிலே வாராதோ ? கெண்டை திகர் கண்ணுர் கணவருத்தத் தீராதோ ?

           120