பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தியாகம்

வேறு சந்தம்


'என்ற னுயிர் பைங்கிளியே-கமலா!
எவ்வள வில் தண்ணீர் வந்த துரையாய்.'
'என்ற னுயிர் ஆன இன்ப நாதா!
என்றன்முழங் கால் அளவில் வந்த திங்கே

[தண்ணீர்.'

'என்ற னுயிர்ப் பைங்கிளியே-கமலா!
எவ்வளவில் தண்ணிர் வந்த துரையாய்.'
'என்ற னுயிர் ஆன இன்ப நாதா!
இடுப்பளவில் தண்ணீரிப்போ வந்திருக்கு

திங்கே.'

'என்ற னுயிர்ப் பைங்கிளியே-கமலா!
எவ்வள வில் தண்ணீர் வந்த துரையாய்.'
'என்ற னுயிர் ஆன இன்ப நாதா!
என் கழுத்தை எட்டிவந் திருக்குதிங்கே

[தண்ணீர்.'

'என்ற னுயிர்ப் பைங்கிளியே-கமலா!
எவ்வள வில் தண்ணீர் வந்த துரையாய்.'
ஒன்றும் பதில் வந்த தில்லை; ஆங்கே!
உவகையுடன் அழுகையுமாய் மன்னன்
மக்கள் நின்றார்.

நீதி தவறினனோ அன்றி நேர்மை குலைங்தேனோ -குடி

களின் துன்பத்திற்குத் தனது தவறே காரணம் என்று எண்ணி அரசன் வருந்துகிறான். நாகினிதேவி-பாதலத்தில் உள்ள என்ற னுயிர்ப் பைங்கிளியே -இவ்வாறு ஒரே சொற்றொடர் பல்லவி போலப் பல முறைவருவது காதை வரியின் ஓர் இலக்கணம்.

127