பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு நடனம் மழை முழுகிய தழைகள் அசையும் பளபளப்பைப் பார்! மாலை வானில் பரிதி வட்டித் தகதகப்பைப் பார்! குழையும் உளமும் தழைய இழையும் குயிலின் கீதம் கேள்! கோட்டுப் பூவில் சுருதி மீட்டும் வண்டுக் கூட்டம் பார்! குழவித் தென்றல் தழுவி யல்லி முத்தங் கொஞ்சல் பார்! குழலி லெங்கோ இடையன் ஊதும் மதுவின் துளிகள் கேள்! அழகின் தெய்வ நடன மிங்கே ஆஹா பாரடா! அவனி யிதுவே இன்ப லோகம் அல்லல் ஏதடா? ஓர் அழகிய மாலேப்பொழுது. மழை பெய்து அப்பொழுது தான் ஒய்ந்தது. வானிலே கவிந்திருந்த மேகக் கூட்டங்கள் 145