பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் பதினறு நீலத்துப் பாழிலே கோளத்துப் பம்பரங்கள் தூங்கும் இசையெழுப்பத் தூங்காத ஆட்டத் தான் நவக்கிரகப் பெருங்கோடி நட்சத்திர மணியுதிரப் பரவெளியில் வெடிவாணம் பவனிக்கு யார் வகுத்தார்? நீளத்து நெடுவழியோ நீள்வட்டப் பொய் வழியோ? தாளக் கணக்குண்டோ சாவெல்லை தானுண்டோ? எல்லையற்ற பேரெல்லை எங்கும் நிறை பரமாணு மனக்குகையில் பேரிமயம் மணிக்கூண்டைக் காலுதைத்துப் பூநின்று பிறப்பித்துப் பால் உறங்கி வாழ்வித்துத் தாளம் தவறடித்துக் கால்மாற்றிக் கன லெழுப்பிப் பொறிவாணம் பொங்கியெழப் புன்னகையில் சினங் காட்டிப் பொறிவாயில் ஐந்தவித்த பொக்கணத்தில் பெண்மயக்க மச்சான் மனங்குளிர மத்தளத்தின் சுதிசேர தச்சன் மலரேறிச் சாவுக்குயிர் படைத்துத் தாளத்தைத் தட்டிடவே சதிருமந்த மார்க்கண்டன் நீளும் பதினருய் நின்றே நடந்திடுமே. 149