பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் திருவிழிகள் திறந்தி-வே செய்திடுவேன் இக்கணமே, பரிவுடன் நீ எழுந்திடுவாய் பாவியென்றன் உளம் மகிழ’. 'கண்மணியே, என்னுள்ளம் கத்தியினல் ஊடுருவி மண்ணில் உயிர் கொட்டி மாண்டு விட்டேன்’ என்றேனே. அன்பெல்லாம் வாழ்விடமே, அணிமார்பால் உன்னுள்ளம் சென்றதொரு புண்ணதனைத் தீரத் துடைப்பன்' என்ருள். பொங்கு முளம் குளிர்ந்திடவே பொன்மொழிகள் பேசிவிட்டாள் : மங்கைதனைத் தான் மறுக்க வாய்வருமோ இனிமேலே ? சுடு காட்டில் என்னுடலைச் சுட்டெரிக்கச் சுற்றத்தார் அடைவாக நெஞ்சின்மேல் அழுதுவ்ைத்த கட்டைதனைத் தள்ளிமிகக் கைவீசிச் சதுராக எழுந்தமர்ந்தேன் : நள்ளிரவில் கனவெனவே நானறிந்து நெட்டுயிர்த்தேன். ஜெர்மன் கவிதை யொன்றைத் தழுவி எழுதியது. 185