பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியடா முரசம் அடியடா முரசம் அன்னையும் வந்தனள்! பீடியடா சங்கம் போற்றியே பாடடா! படி யெலாம் படைத்த துடிநிகர் இடையினள் இடியெனச் சிரித்தே எழுந்தனள் ஜய ஜய! அரக்கர்கள் மடிந்தனர் அல்லலும் தொலைந்தது முருக்கினை ஒத்ததோர் முறுவலின் முன்னே. அன்னை பயங்கரி அகிலாண் டேஸ்வரி முன்னையும் பின்னையும் முடிவிலா திருப்பவள் பசுபதி தன்னையே பாகத் திருத்துவாள் அசுரரைச் சாடியே அகமகிழ்த் திடுவாள் குருதியில் திளைத்தே கொக்கரித் தாடுவாள் கருமுகில் போன்றவள் கழலடி நினைந்தே அடிமையாந் தளையினை அறுத்தெறிந் திட்டோம் படர்புகழ் பாரதப் பண்பினை நாட்டினுேம்: உண்மையே மூச்சதாய் உழைப்பதே உயிரதாய் எண்ணிலாப்பேரறம் இயற்றி நாம் வாழுவோம். விளைந்தபே ரிடரெலாம்; விடியற் கருக்காலம் களைந்துநல் லின்பக் கதிவரள் வீசுவாள்; 199