பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறை குடம் பிடிபட்டு வாழ்வெல்லாம் பித்தளுய்த் திரிந்துழன்று உற்ருரைத் தான்மறந்தான்; ஒருகுழந்தை யது மறந்தான்; மற்றவனும் கைபிடித்த மனையாட்டி தனைமறந்தான் பொன்கொடுத்த தெய்வத்தைப் பொழுதோடே தான் மறந்தான்; கண்ணெலாம் குறைகுடத்தில் கவலையே வாழ்வாக வறுமையினும் தெளிவுடையோர் மனத்துலவும் சாந்தி யின்றிக் குறைகுடமும் நிறையாமுன் நிறைந்ததவன் காலமிங்கே. 302