பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலங்கு நெறி நாளின் பெருவிளக்காம் நற்கதிரோன் மேல்வானில் காளைச் சினம் உகுத்துக் கனிந்துநகை தான்பூத்து நின்றேயவ் வான்திரையில் நீள்கதிர்ப்பொன் துாரிகையால் ஒன்ருே ஒருகோடி ஒவியங்கள் தீட்டியவை மாற்றி யழித்தாடி மகிழ்ந்திருக்கும் வேளையிலே காற்றின் இளந்தழுவல் கன்னற் சுவைநாடிச் செவ்வரளிப் பூக்குலுங்கும் சிற்ருேடை யருகனேந்தேன் கொவ்வைக் கொடிபடர்ந்து குறுநொச்சிக் கிளையெல்லாம் கணிப்பவழத் தணிசெய்த கரும்பச்சைப் பின்னலின்கீழ் தனித்திருந்து சாய்பொழுதின் ஜாலமெலாம் - கண்டிருந்தேன்மினுமினுத்துச் சிலுசிலுக்கும் மெல்லோடை மருங்குவளர் மணிமணிப்பூக் கன்னியர்கள் மனங்களிக்க நடமாடி ஒயிலாய் உடல்வளைத்து ஒடைநீர் முத்தமிடக் குயிலொன்று தூரத்தே கூவித் துணைதேட எங்கும் ஒருமோன ஏகாந்தம் ஆட்சிசெயும் பொங்கும் அழகதனிற் புகுந்ததொரு மீன்கொத்தி: 205