பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதக்காதி செந்தமிழ் போற்றிய சீதக் காதியே இன்று நீ எம்மிடை இருந்திடல் விழைவேன்:செத்துங் கொடுத்த சீர்மிகுங் கொடையால் இத்தரை மீதினில் என்றும் அழியாப் புகழுடம் பெய்தித் திகழ்ந்தனை யெனினும் சமயப் பிணக்கும் சாதிப் பிணக்கும் குறுகிய நோக்கும் பெருகுமிந் நாளில் அருந்தமிழ் வளமலால் பிறிதொன் றெண்ணு வள்ளல்நீ யாக்கையில் வாழ்ந்தனை யாளுல் உன்வழி கண்டு உய்வகை தெளிவோம்; பிரிவினை அறியாப் பெருமைசேர் தமிழன் அன்னட் கண்டநல் லன்பறம் ஆண்மைசேர் வாழ்வினை மீண்டும் வளர்த்திட எளிதாம் என்றே ஏங்குமென் உளமே. 217