பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலை மின்னலை வான வில்லில் இழைத்தே-சுடர் மீன்திரள் நவமணிகள் பல நூறு கோத்து சன்னமாய்க் கதிரவன் கம்பிகள் பின்னி-முழு சரத்கால வெண்ணிலாச் சரிகைகள் கட்டி காதல்தேன் ஊறிடும் உள்ளமலர் அவிழும்-மணங் கமழவே கனவெல்லை அமுதோடம் தாண்டி மோதுமென் உணர்வாழி கரையிடும் இன்பம்-உயர் முத்தொளிர் மாலையிது மார்பில் அணிவாய். 221