பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறந்து வாழ்க மறந்து நீ வாழ்வாய்-இனிமேல் மறப்பதே வாழ்வாம் குழந்தைப்.பருவமுதல் கூடநாம் வளர்ந்ததும் கொஞ்சியே இருவரும் ஆடி மகிழ்ந்ததும் நாளொரு மேனியாய் எழில் கொண்டு நின்றதும் நல்ல கதைகள் சொல்லி சிரித்து மெய்மறந்தும் உணர்வெலாம் காதலாய் ஓங்கிய காலத்தில் ஊரைவிட்டே ஆற்றின் ஒரத்தில் சென்றதும் மாயமாய் நானென்றன் கண்களை இழந்ததும் மனத்தினில் ஓங்கி வந்த கோட்டைகள் இடிந்ததும் 222 (மறந்து நீர் (மறந்து நீ) (மறந்து நீர் (மறந்து நீர்