பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில் கால்சுரக்கும் அனுப்பிளந்தோம் கடவுளுக்கே நிகரென்று கருவமுடன் ேதாள்புடைத்தோம் கடையூழி சிரித்ததுவே கரையில்லாக் காதலினல் காவிரித்தண் சோலையிலே கவிதைபின்னிப் பாடுகின்ருய் கந்தருவர் நாடறிந்தேன் உரையில்லாக் கனிவென்னுள் ஊற்றெடுக்கச் செய்ததுபோல் உலகெல்லாம் பகைமாறி உயரன்பு பெருங்கருணை புரையில்லா அறவாழ்வு பொங்கிடவே பாடாயோ புன்மையெலாம் பொன்றியிது பொன்னடாய்த் தழையாதோ நன்ரயில்லா அருள்வாழ்வில் நட்புறவே காணேமோ நல்லிசையால் மெய்யுணர்வாம் நறவூட்டும் பூங்குயிலே முத்துநிலாப் பந்தரின்கீழ் மோகனத்துப் பாட்டுருவாய் முகிழ்த்திருக்கும் உன்னிடத்தே முறையிட்டுன் மகிழ்வொழிக்கச் 228