பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பச்சைக் குழந்தை


பச்சைக் குழந்தை என்றால்-எனக்கொரு
பாசம் பிறக்குதம்மா-அதன்
கொச்சை மழலையிலே-உளந்தான்
கொஞ்சிக் களிக்குதம்மா

சின்னஞ் சிறு சிரிப்பில்-கவலைகள்
தேய்ந்து மடியுதம்மா-அதன்
மின்னும் உடல் வளைவில்-அமுதின்
விண்சுவை ஏறுதம்மா

வண்ணச் சிறு விருந்தை-அன்பில்லா
வார்த்தைகள் சொல்லாதீர்-அதன்
கண்ணில் கலக்கம் என்ருல்-என்னுள்ளம்
கன்றிக் கரையுமம்மா

தெய்வப் புது மலரை-என்றுமே
சீறி விழிக்காதீர்-அதன்
மெய்யில் அடியும் பட்டால்-என்னுள்ளம்
வெடித்துப் போகும்ம்மா

ஆட்டமும் காட்டிடு வீர்-குழந்தையை
அன்பில் வளர்த்திடு வீர்-அதன்
வாட்டமெலாங் களைந்தே-இன்பத்தில்
மரலச் செய்திடு வீர்

அன்பில் மலர்ந்து விட்டால்-இளம்பூ
ஆனந்தத் தேன்சொரியும்-அதன்
இன்பப் பெரு வாழ்வே-நமக்கினி
என்றும் இனிப்ப தம்மா.

25