பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/239

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நிலாப் பிஞ்சு

மின்னற் கொடியதனில் மிகநயமாய்த் தறித்தெடுத்த
வன்னச் சிறுவளைவாய் மயங்கந்தி மேல்வானில்
விஞ்சைக் கனவைப்போல் வேளுக்குப் புதுவில்போல்
பிஞ்சுப் பருவத்தின் பேசரிய அதிசயத்தால்
அன்னை முகநோக்கும் அருங்குழவி யெனவுலகந்
தன்னை யெட்டியெட்டிப் பார்க்கும் தளிர்க்கீற்றே
காதலனைச் சந்திக்கக் கதிர்மறைவில் வந்தகன்னி
பாதைமுனை அவன்வரவை பார்த்தங்கு புதர்ச் செறிவில்
விளையாட்டாய்ப் போயொளிக்கும் வேளையிலே உளம்பொங்கி
முளைகாட்டும் புன்சிரிப்பை மோனவெளி நீலத்தில்
வீசிவிட்டுச் சென்றதுபோல் விளங்குகின்ற நிலாப்பிஞ்சே
ஆசையற்றுத் தோலுடுத்து அரவுபுனை சிவனுர்க்கும்
இத்தனைபே ரெழிலுடன்நீ இருப்பதளுல் சிரமணிய
மெத்தவுமோர் பேராசைப் பித்தமெழல் வியப்பாமோ?
கலைமலரும் மெல்லரும்பே கவிஞனுளக் கற்பனையின்

241


15