பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரி3இனி காலம் என்பது மாயை. நீலப் பாழ். வெளி-இடம். இடம் காலத்தைக் காதலிக்கிறது. இவற்றின் கலவியிலே தோற்றம் ஏற்படுகிறது. துடிமுழக்கம் தோற்றத்திற்குச் சின்னம். தோற்றம் துடியதனில். துடி-டமருகம். பிரபஞ்சத்தின் தோற் றத்தைப் பரம்பொருளின் நீண்ட மூச்சாகவோ (கெட்டுயிர்ப்பு) புன்னகையாகவோ கொள்ளலாம். ஆளுல் பரம்பொருளுக்கு இது மின்னல் போன்றது. தோற்றமாகிய மின்னல் உண்டா வதற்கு மேகமாக உள்ளது பரம்பொருள். அதுவே வெறு வெளிக்கும் காலனுக்கும் விசை. கன்னல் கரும்பு; கட்டி. வெல்லம். காலமும் இடமும் சதிராடுகின்றன. கரும்பிலே வெல் லம்போல் மறைந்து கிற்கும் பரம்பொருளின் கண்க்கறிந்தால் இடமும் காலமும் சூனியமாகும். 'கணக்கறிந்தார்க்கன்றிக் காணவொண்ணுது என்று தொடங்கும் திருமந்திரப் பாடலை (318) இங்கு சேர்த்துப் பார்க்க. இறைவன் சதிராடு கின்ருளு? காலவெளி சதிராடுகின்றனவா? இறைவன் ஆடும் போது இவை ஆடித்தானே ஆகவேண்டும்? கெஞ்சத் தீ என்பதைக் காதலுக்கு அடையாளமாகக் கொள்ளலாம். அண்டங்களின் தோற்றம் உருவெடுக்காத நிலையிலே பாழ் வெளியிலே ஏதோ ஒரு சமயத்தில் திடீரென்று உண்டாகும் அணுக்களின் சேர்க்கையாகவும் அதைக் கொள்ளவேண்டும். X46