பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை இன்பமடா! எத்தனை இன்பமடா இளமையின் எக்களிப்பு ! முத்துச் சிரிப்பவிழும் மோகனஞ்சேர் சாயலுடன் அசைவிலே ஒரழகு அடியெடுக்கத் தனியழகு வசியங்கள் பலகாட்டி வஞ்சி நடக்கின்ருள்அன்பினிலே சொக்கி அழகைப் பருகியவன் என்ன பிறப்பிதடா இருநயனச் சாளரங்கள் தந்த எழிற்பிழம்பின் தனியின்பம் கண்டுசொலத் தந்தமிலா ஒருநாக்கு தத்திநலி புன்சொற்கள் என்றவள்தன் மருங்கினிலே எடுப்பான தோற்றமுடன் சென்றவனைச் செவ்வேளாய்ச்சிந்தையினில் அமர்த்தியவள் மேதினியிற் காண்பதெலாம் விந்தையெனக் களிப்புடனே காதலர்கள் போகின்ருர் கண்ணுக்கு நல்விருந்துதெய்வீகக் காதலிது சிறுமையெலாம் துடைத்தெறி மெய்யாக இவ்வுலகை வீடாக்கும் ஆதலினல் (யும் மாசிலாக் காதலுக்கு வரம்பொன்றும் கட்டாதீர் வீசுகின்ற தென்றலப்போல் விரிந்ததுவே அனைத்துயிர்க்கும் 268