பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்தாய் வருக நிலாவே, வந்தென் கண்மணிக்கு உச்சியில் ஒரு முத்தம் கொடு' பூங் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தாய் கூவுகிருள்: அந்தி வானத்தின் மங்கிய நீலப்பரப்பில் மாரிக்கால நிலவுப்பெண் மிதந்து வருகிருள்; சோலையிலிருந்து பூக்களின் மெல்லிய நறுமணம் இருளில் பதுங்கி வருகிறது; வீதியில் கவலையின்றிக் கோமாள மடிக்கும் சிறுவர்கள் சிரித்து ஒலி யெழுப்புகிரு.ர்கள்; தூக்கங் கொள்ளாத குயில் ஒன்று மாஞ்சோலையின் நிழல் அடுக்கத்தில் தனிமையாகத் தனது உள்ளத்தைப்பாடிக் களிக்கிறது; தொலைவிலிருக்கும் உழவனது உள்ளத்தினின்று வெளிப்படும் குழலின் பூவோசை மீன்குயிற்றிய வானத்தில் தாவி, அசையாத காற்றில் பரவி, பிறகு பூமியில் பொறிவான மத்தாப்புப் போல உதிர்கிறது; 276