பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வேன் வீட்டுவழி நெடும்பயணம் விரற்கடையில் நூற்றிலொன்று எட்டிவைத்தாலும்போதும் : என்னுளத்தின் பண்பாடு நெட்டுழவு பலவடித்துக் கட்டியெல்லாம் தட்டிவிட்டுப் பண்பட்ட செய்போலப் பலன்தரவே மெல்லமெல்லக் கண்ணெட்டாச் சிற்றளவில் களையாமல் கோளுமல் வந்தவழிச் சுழலாமல் வழுக்கியொரே படுகுழியில் அந்திசந்தி வீழாமல் அடியிட்டால் மகிழ்வேனே. காழ்-உரம், புடத்தீ.வாழ்வில் ஏற்படும் சோதனைகள். செய் கிலம். முன்னேற்றம் சிறிதளவு நாள்தோறும் கடந்தாலும் திருப்தி கொள்ளலாம். 284