பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/286

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சோதியே சுடரே



எங்கும் நிறைந்தெல்லை இல்லாமற் பாழ்வெளியில்
கங்குல் பகலெல்லாம் கடந்துநின்ற பேரொளியே
மருளுற்ற கண்ணுடையேன் வலிகுறைந்த பார்வையினேன்
விரிபுவனம் தாண்டிநிற்கும் பரஞ்சோதி யான் வேண்டேன்
மின்மினியாய் எக்காலும் என்னகத்தே நின்றிடுவாய்
இன்பத்தும் துன்பத்தும் இப்பொறியின் சுடரொளியில்
ஆடாமல் அவியாமல் அடியிருட்டு முழுகாமல்
கோடாமல் நெறிசென்று குறிக்கோளை எய்துவனே.



288