பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகும் அன்பும் அழகுடையாள் என்றுரைத்தீர் அன்புள்ளம் உடையாளோ? அழகைநான் கண்டதில்லை அன்பில்லாத் தோற்றத்தில்காமனுமே கண்மயங்கும் கட்டழகும் உள்ளமதில் தாவியெழும் கருணையன்புத் தண்சுடரில் தோயாத இருள்செறிகானென்றி.டிலோ ஏதுபயன்? ஏதின்பம்? மருள் விழியும் கனியிதழும் மனம்சுரக்கும் அன்பினிலே மலர்ந்தறியாப் புன்முகத்தில் வாழ்வுதரும் அழகுண்டோ? புலர்ந்தவுடன் கரந்துறையும் புலிவடிவம் நன்றெனினும் கொடுமையில்ை அதன்செவ்வி குறைபட்ட தறியோமோ? நெடும்பிறவிப் பிணிமாற்றும் நிலையன்பே அழகாமால். அன்பே உண்மையான அழகு தருகின்றது. புலர்ந்த வுடன்-பொழுதுவிடிந்ததும். கரந்துறையும்-மறைந்து வசிக்கும். செவ்வி-அழகு. 295