பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடக்காரன் "அரியதோர் ஒடம் செலுத்திடும் அன்பனே பரிவுடன் என்மூகம் பார்த்து நீ அதனில் ஏற்றியே அக்கரை சேர்க்கவும் இசைவாய்.” 'வேற்றுவா கனங்கள் மிகப்பல உளவே?” அவையெலா மேறிநான் அலுத்தனன் ஆற்றினத் தவறிலா திம்முறை தாண்டவே விழைந்தேன்.” 'உறுதியாய் நின்ருல் உதவிடும் ஒடும்; வருகநீ யானும் மகிழ்ந்தனன் உள்ளம்.” "எத்தனை எத்தனை இன்பமீன் இங்கே ! மெத்தக் களிதரும் வேடிக்கை எத்தனை! சற்றுநான் ஆற்றில் தாவியே திளைப்பேன்." "பற்றிடச் சூழ்ந்து பதுங்கிடும் வஞ்சக - மாயைகள் அறியாய் மனம்பறி கொடுத்துத் தாயகம் சேரும் எண்ணமும் தவிர்வையோ?” "தோணியிற்பலவாய்த் தொளைகளும் தோன்றின. காணவும் கூசினேன் கலக்கியே வெள்ளம் பாறையில் மோதிடப் பகரொளுத் தொல்லைகள் மீறிய தந்தோ வேதனை பொறுக்கிலேன்.” "இவையெலா முன்றன் இச்சையின் விளைவே 300.