பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரிய நிலை சூரியனில்லை சோதியுமில்லை சுந்தரமானதோர் திங்களுமில்லை சாரும் நிழலெனச் சூனியத்துள்ளே சராசரமெல்லாம் மிதந்தனவே அஸ்புடமான மனமெனும்வானில் அகிலமு மொன்ருய் மிதக்கையிலே அகமெனும் வெளியில் நிரந்தரமாக அமிழ்ந்திடும் பின்னர்எழுந்திடுமே முடிவினில்மெதுவாய்ச் சாயைகளெல்லாம் மகாலயமொன்றில் கலந்தனவே துடித்திடுவதுநான் நானெனும்உணர்வே சிறிதும்வேறிலை துடிப்பிதையல்லால் உணர்வுதானிதுவும் சூனியத்துள்ளே சூனியமாகவே ஒன்றியதே உரைமனங்கடந்த துரியமாம்நிலை.இதைச் சேர்ந்தவரேதா னுய்த்தறிவார். சுவாமி விவேகாகந்தர் தமது அனுபவத்தால் கண்ட பேருண்மையை விளக்கி எழுதிய பாட்டின் பெயர்ப்பு. 303